இளநெஞ்சே வா தென்றல் வந்து தீண்டும் போது
Jul 27

பாடல் : தேவதையக் கண்டேன்
படம் : காதல் கொண்டேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்தர்
வரிகள் : நா. முத்துக்குமார்

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன்தனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.

(தேவதையை)

தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்தரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே

(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.

(தேவதையை)

(ஒரு வண்ணத்துப்பூச்சி)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

One Response to “தேவதையைக் கண்டேன”

  1. அருட்பெருங்கோ Says:

    ராதா செந்தில் said…

    //கல்தரை மேலே பூக்கும் பூக்கள்//

    கல்தரை அல்ல. ‘கல்லறை’. திருத்திக்கொள்ளுங்கள்.
    ஜூலை 28, 2007 மதியம் 3:29
    அருட்பெருங்கோ said…

    /கல்தரை அல்ல. ‘கல்லறை’. திருத்திக்கொள்ளுங்கள்./

    திருத்தப்பட்டு விட்டது செந்தில்.
    திருத்தியதற்கு நன்றிகள் :)
    ஜூலை 29, 2007 மதியம் 12:56
    delphine said…

    பாடலையும், அத்தோடு கூட அதன் இசையையும் கேட்கும் போது நல்லா இருக்குது காதல் மன்னா.
    ஜூலை 29, 2007 மதியம் 1:11
    அருட்பெருங்கோ said…

    /பாடலையும், அத்தோடு கூட அதன் இசையையும் கேட்கும் போது நல்லா இருக்குது காதல் மன்னா. /

    நன்றிங்க மேடம்.

    காதல் மன்னனா? மத்தவங்கதான் கலாய்க்கிறாங்கன்னா, நீங்களுமா? :(
    ஜூலை 29, 2007 மதியம் 2:43

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout