பாடல் : சங்கீத ஸ்வரங்கள்
படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி
குரல் : எஸ்.பி.பி
வரிகள் : ???
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
August 3rd, 2007 at 1:43 pm
தோ வந்திட்டேன்
பாலச்சந்தர் வெகு நாளைக்குப் பிறகு வெளி நிறுவனம் ஒன்றிற்காக இயக்கிய படம் அழகன்.கோவை செழியன் தயாரிப்பில் வந்த இந்தப்படத்தோட எல்லாப் பாடல்களையும எழுதியது வைரமுத்து இல்லை.புலமைப்பித்தன் அவர்கள்.
இதேபோல் கல்கி படத்தில் பாடல்கள் எழுத இளந்தேவன் என்னும் கவிஞரை உபயோகப்படுத்தினார் கே.பி.இந்த இளந்தேவன் ஒரு முன்னாள் அரசு அலுவலர்.இப்போ அம்மாவுக்கு உரைகள்,பேட்டிகள் தயாரிச்சுக் கொடுக்கிற குழுவிலயும்,நமது எம்.ஜி.ஆரிலயும் அருந்தொண்டு ஆற்றி வருகிறார்.
ஸ்சப்பா..ஜோடா ப்ளீஸ்
August 4th, 2007 at 7:51 am
தகவலுக்கு நன்றிகள் தகவல் சுரங்கமே :)))
புலமைப்பித்தனும் அதிமுகவில இருந்தவ்ர்தானே? (இருக்கிறவர்?)
ஜோடா வேணாம்… இந்தாங்க ஜில்லுனு மோர் குடிங்க…