பூவே செம்பூவே தேவதையைக் கண்டேன
Jul 27

பாடல் : இளநெஞ்சே வா
படம் : வண்ன வண்ணப் பூக்கள்
இசை : இளையராஜா
குரல் : கே ஜே ஜேசுதாஸ்
வரிகள் : வாலி

இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்..என்னோடு ஒரு சங்கீதம்…இந்நேரம்…

(இள நெஞ்சே வா)

பச்சைப் புல் மெத்தை விரித்து அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும் செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள் தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன் பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே…இந்நேரம்…

(இள நெஞ்சே வா)

அற்புதம் என்ன உரைப்பேன்.. இங்கே வர என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்தேன் இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான், வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே… இந்நேரம்…

(இள நெஞ்சே வா)

பாடலைக் கேட்க:


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

One Response to “இளநெஞ்சே வா”

  1. அருட்பெருங்கோ Says:

    சேதுக்கரசி said…

    http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html
    ஜூலை 11, 2007 இரவு 3:34
    G.Ragavan said…

    நல்ல பாடல். மிகவும் இனிமையான பாடல்.
    ஜூலை 11, 2007 காலை 11:54
    Chandravathanaa said…

    நல்ல, இனிமையான பாடல்.
    ஜூலை 11, 2007 மதியம் 12:27
    vathilai murali said…

    கற்பனையும் இசையும் காட்சியமைப்பும் போட்டி போட்ட அருமையான பாடல்களில் ஒன்று. வரிகளை வாசிக்கும்போது மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது.நன்றி
    ஜூலை 11, 2007 மதியம் 1:29
    அருட்பெருங்கோ said…

    @ சேதுக்கரசி

    தகவலுக்கு நன்றிங்க :)

    @ ராகவன்

    உங்களுக்கும் பிடிச்சப் பாட்டா? சந்தோசம் :)

    @ சந்திரவதனா

    ஆமாங்க ரொம்பவும் இனிமை.

    @ முரளி,

    நானும் வரிகளைப் பிடித்திருப்பதால்தான் ஒவ்வொருப் பாடலாக போடுகிறேன்…
    ஜூலை 11, 2007 மாலை 7:31

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout