பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிது
படம் : தர்மபத்தினி (1986)
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா , ஜானகி
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி… ஆஆஆ ஆஆஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம்தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா ஆஆஆ ஆஆஆ
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
August 8th, 2007 at 9:25 pm
இளையராஜா நிகழ்த்திய ஜெயாரீவி நிகழ்ச்சியில் மஞ்சரியும் ராஜாவும் இணைந்து பாடினார்களே இந்த பாடலை அற்புதமாயிருந்தது. அன்றிலிருந்து மஞ்சரியின் குரலுக்கு ரசிகள் நான். ஜானகியைக் குறை சொல்லவில்லை
August 8th, 2007 at 9:50 pm
என்னை மயக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
August 9th, 2007 at 9:30 am
வாங்க அகிலன்,
/இளையராஜா நிகழ்த்திய ஜெயாரீவி நிகழ்ச்சியில் மஞ்சரியும் ராஜாவும் இணைந்து பாடினார்களே இந்த பாடலை அற்புதமாயிருந்தது. அன்றிலிருந்து மஞ்சரியின் குரலுக்கு ரசிகள் நான். ஜானகியைக் குறை சொல்லவில்லை/
நான் இளையராஜா குரலுக்காகவே ரசிக்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று.
மஞ்சரி குரலை இன்னும் கேட்கவில்லை… கேட்டு விட்டு சொல்கிறேன்
August 9th, 2007 at 9:31 am
/ என்னை மயக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று./
ஆமாம் குமார்! மனதை மயக்கி விடும் பாடல்தான்!
August 13th, 2007 at 10:17 pm
enakum intha padal pidikum
August 13th, 2007 at 10:26 pm
/ enakum intha padal pidikum/
பலருக்கும் பிடித்த பாடல் தான் இது நண்பரே
October 30th, 2007 at 12:02 pm
அடடே…பாடலின் துவக்கத்தில் இளையராஜா செய்யும் ஆலாபனை இருக்கிறதே…
Eternal bliss….
October 30th, 2007 at 10:50 pm
இந்தப் பாடல் எனக்கு எப்பொழுதும் பிடிக்கும். சிறூவயதில் இருந்தே நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று ராஜாவின் குரலும் கவிவரிகளும் மனதைக் கொள்ளை கொள்ளும், இந்தப் பாடலின் சுவையை வார்த்தைகளால் வடிக்கமுடியாது.
இளையராஜா நிகழ்த்திய ஜெயாரீவி நிகழ்ச்சியில் மஞ்சரியும் ராஜாவும் இணைந்து பாடினார்களே இந்த பாடலை அற்புதமாயிருந்தது. ஒன்ஸ்மோர் கேட்டு மீண்டும் பாடிய பாடல்.
இந்தப்பாடலில் ஆரம்பத்தில் ராஜாவின் ஆலாவும் அதன்பின்னர் வரும் அந்த கிட்டார் இசையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ராஜா ராஜாதான்.
October 31st, 2007 at 1:03 am
அருமையான பாடல்….
கங்கை அமரன் எழுதியது.