எனதுயிரே எனதுயிரே ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்… “ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே”
Oct 29

“ஒரு சிரி கண்டால்” எனும் மலையாளப் பாட்டின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள் :

ஆண் :

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா
திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா
ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…

கார்கால மேகம்… கருஞ் சாந்தள்ளிப் போகும்
தலையாட்டி நீள்கூந்தல் உலரும் நேரம்… ஹோய்…
வெயில் காயும்நேரம் சுட்டெரிக்கும் தீச்சூர்யன்
சிறுவிழிச் சூட்டினில் உருகுவதேன் கண்ணே
நதியினில் மீனென அலைகிற பெண்ணுடன் சேர்ந்தாடும் நீரும்
பொழிகிற மழையினில் நனைகிற உன்னுடன் கூத்தாடும் வானும்
உலகே வந்து கொஞ்சுமோ… உயிரில் வந்த ஓவியம்

பெண்:

கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே
புயல்வெளி காற்றைப் போல் நாணம் தடுக்கிறதே
அந்தியில் பூத்ததும் காற்றுடன் கலக்கிற பூமணம் போலே
இரவினில் தனியென நிலவுடன் மொழிகிற ஆகாயம் போலே
கனவில் வந்து சொல்லுவேன்… நனவில் கொண்ட காதலை

மலையாளப் பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

பதிவர்களில் பாடகர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பாடலின் karoake அனுப்புகிறேன். முடிந்தால் பாடித் தாருங்கள் :)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

45 Responses to “குறு நகை கண்டால்…”

  1. Anonymous Says:

    inimaiyan vrigal.

    yaravathu tamil kondu varalame

  2. கோவி.கண்ணன் Says:

    அருள்,

    வரியும், சந்தமும் நன்றாக பொருந்துகிறது. கவி நயமும் மிக நன்றி !

    பாராட்டுக்கள் !

  3. மதுமிதா Says:

    அருமை அருட்பெருங்கோ
    மிக மிக இனிமை!

    வாழ்த்துகள்!

  4. SurveySan Says:

    namakku anuppunga saami

    surveysan2005 at yahoo.com :)

    karaoke use panni eppadi record pannanumnu oru padhivu pottu sollik kodunga.

  5. SurveySan Says:

    இந்த பாட்ட பத்தி நான் போட்ட பதிவு பாருங்க

    http://surveysan.blogspot.com/2007/01/blog-post_09.html

    ராசா அவரின் இன்னொரு பாட்டிலிருந்து ‘எடுத்தது’ இது :)

  6. மதுமிதா Says:

    கருவிழி கண்டால் தினம் கண்டால் சுடரொளி
    சிறுஒலி கேட்டால் மொழி கேட்டால் எதிரொலி
    சதிராடும் பெண்மனத்துள்ளே சிறகாடும் காயங்களா
    சிறையான உணர்வினினுள்ளே உறங்காத சோகங்களா
    ஏ கண்ணே இது போதுமினி உளமும் உருகியதே

    *****
    முடியல அருட்பெருங்கோ
    எழுதுறத நிறுத்த‌.

    மீதியும் எழுதிட்டேன்னா தனிபதிவா போடவேண்டியதுதான்:-)

  7. delphine Says:

    அருமை… அருமை.. பாட்டும் அதன் தமிழ் மெட்டும்..

  8. மதுமிதா Says:

    போர்க்கால வேகம் உளம்தான் பற்றி வேகும்
    திரைபோட்ட தீமோகம் உருகும் நேரம் ஹோய்
    தையல் ஏங்கும் நேரம் பட்டெரியும் தீஞ்சந்தனம்
    தழுவிடும் வேட்கையில் பெருகுவதேன் கண்ணே
    விதியினில் ஆடிடும் துரும்பென என்னுடல் சோர்ந்தோடும் வீணே
    மதிவழி நினைவினில் உயிர்க்கிற உன்னுடன் சேர்வேனே நானே
    உயிராய் வந்து தீண்டுமோ கனவில் வந்த தேவியும்

  9. மதுமிதா Says:

    நன்றி அருட்பெருங்கோ.

    http://madhumithaa.blogspot.com/2007/10/blog-post_3037.html

  10. அருட்பெருங்கோ Says:

    /inimaiyan vrigal.

    yaravathu tamil kondu varalame/

    நன்றி அனானி ( தயவு செய்து பெயர் குறிப்பிடுங்களேன் :))

  11. அருட்பெருங்கோ Says:

    /அருள்,

    வரியும், சந்தமும் நன்றாக பொருந்துகிறது. கவி நயமும் மிக நன்றி !

    பாராட்டுக்கள் !/

    பாராட்டுக்கு மிகவும் நன்றிங்க கோவி!!!

  12. அருட்பெருங்கோ Says:

    /அருமை அருட்பெருங்கோ
    மிக மிக இனிமை!

    வாழ்த்துகள்!/

    வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிங்க மதுமிதா!

  13. அருட்பெருங்கோ Says:

    /namakku anuppunga saami

    surveysan2005 at yahoo.com :)

    /

    இங்க இருந்து எடுத்துக்கலாம் சர்வேசன் - . ஆனா இது முழுமையான கரோக்கி அல்ல. பாடகர்களின் குரலை மட்டுப்படுத்த மட்டுமே முடிந்தது. நீக்க முடியவில்லை.

    /karaoke use panni eppadi record pannanumnu oru padhivu pottu sollik kodunga./

    acoustica mixcraft என்று கூகிளில் தேடி தரவிறக்கிக் கொள்ளுங்கள். அதில் கரோக்கியையும் குரலையும் தனிதனி ட்ராக்கில் பதிந்து பிறகு ஒன்று சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் எளிதுதான். கொஞ்சம் பழகினாலே புரிந்து கொள்ளலாம்.

  14. அருட்பெருங்கோ Says:

    /இந்த பாட்ட பத்தி நான் போட்ட பதிவு பாருங்க

    http://surveysan.blogspot.com/2007/01/blog-post_09.html

    ராசா அவரின் இன்னொரு பாட்டிலிருந்து ‘எடுத்தது’ இது :)/

    பார்த்தேன் சர்வேசன்.
    பல தமிழ் பாடல்களின் கலவைதானோ இது ;)

  15. அருட்பெருங்கோ Says:

    /கருவிழி கண்டால் தினம் கண்டால் சுடரொளி
    சிறுஒலி கேட்டால் மொழி கேட்டால் எதிரொலி
    சதிராடும் பெண்மனத்துள்ளே சிறகாடும் காயங்களா
    சிறையான உணர்வினினுள்ளே உறங்காத சோகங்களா
    ஏ கண்ணே இது போதுமினி உளமும் உருகியதே

    *****
    முடியல அருட்பெருங்கோ
    எழுதுறத நிறுத்த‌.

    மீதியும் எழுதிட்டேன்னா தனிபதிவா போடவேண்டியதுதான்:-)/

    /போர்க்கால வேகம் உளம்தான் பற்றி வேகும்
    திரைபோட்ட தீமோகம் உருகும் நேரம் ஹோய்
    தையல் ஏங்கும் நேரம் பட்டெரியும் தீஞ்சந்தனம்
    தழுவிடும் வேட்கையில் பெருகுவதேன் கண்ணே
    விதியினில் ஆடிடும் துரும்பென என்னுடல் சோர்ந்தோடும் வீணே
    மதிவழி நினைவினில் உயிர்க்கிற உன்னுடன் சேர்வேனே நானே
    உயிராய் வந்து தீண்டுமோ கனவில் வந்த தேவியும்/

    /நன்றி அருட்பெருங்கோ.

    http://madhumithaa.blogspot.com/2007/10/blog-post_3037.html/

    மதுமிதா,

    உங்களையும் எழுதத் தூண்டியதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே!!! வாழ்த்துகள்!!!

  16. R.S.Mani Says:

    அருள்,

    இனிமையான பாடல்.
    சொற்கள் அழகாக வந்து விழுந்திருக்கின்றன.
    சில இடங்களில் தட்டினாலும் சந்தம் நன்றாக அமைந்திருக்கிறது. உங்கள் பதிவை சுட்டிக் காட்டிய மதுமிதாவுக்கு நன்றி.

    ஆர்.எஸ்.மணி
    கனடா

  17. மதுமிதா Says:

    நன்றி அருட்பெருங்கோ.

    /Thanks for introducing ArutperungO’s blog. He is a pretty good lyric writer.

    ஆர்.எஸ்.மணி /

    /அருட்பெருங்கோவின் பதிவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
    நன்றாகப் பாடல் எழுதுகிறார்.

    ஆர்.எஸ்.மணி/

    ஆர்.எஸ்.மணி அவர்கள் நம்ம பதிவில் உங்களுடைய பாடலை சிலாகித்து எழுதியிருக்கிறார் அருட்பெருங்கோ.

    அவர் சிறந்த பாடகர்;
    சிறந்த இசையமைப்பாளர்.

  18. R.S.Mani Says:

    “பதிவர்களில் பாடகர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பாடலின் karoake அனுப்புகிறேன். முடிந்தால் பாடித் தாருங்கள் :)”

    Arul,

    You may send the music track to my email address: raghava.mani@gmail.com.

    I like the music and would like to record the voice over - as a solo male voice.

    At present I am busy preparing for my India trip. Would like to do the song on my return.

    R.S.Mani

  19. நவீன் ப்ரகாஷ் Says:

    அழகான படல் வரிகள் மனதைத் திருடும் இசை :))) அருமை அருள் !! எனக்கும் கரோக்கி அனுப்புங்க அருள் . :)))

  20. Sud Gopal Says:

    படித்தேன்..கேட்டேன்..பாடியும் பார்த்தேன்…

    நல்லதொரு அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி,அருள்…

  21. காரூரன் Says:

    மதுமிதாவின் தளத்தின் மூலம் உங்கள் தளம் எனக்கு அறிமுகம். நன்றாக வார்த்தைகளை உங்கள் கவிதையில் பாவித்திருக்கின்றீர்கள். கவிதையில் உயிர்ப்பு இருக்கின்றது.
    வாழ்த்துக்கள்.

  22. அருட்பெருங்கோ Says:

    /அருமை… அருமை.. பாட்டும் அதன் தமிழ் மெட்டும்../

    ரொம்ப நன்றிங்க மேடம் !!!

  23. அருட்பெருங்கோ Says:

    /அருள்,

    இனிமையான பாடல்.
    சொற்கள் அழகாக வந்து விழுந்திருக்கின்றன.
    சில இடங்களில் தட்டினாலும் சந்தம் நன்றாக அமைந்திருக்கிறது. உங்கள் பதிவை சுட்டிக் காட்டிய மதுமிதாவுக்கு நன்றி.

    ஆர்.எஸ்.மணி
    கனடா/

    மிக்க நன்றிங்க மணி!!!
    எனது பதிவை விளம்பரப்படுத்தியதற்கு நான்தான் மதுமிதாவுக்கு நன்றி சொல்லனும் ;-)

  24. அருட்பெருங்கோ Says:

    /ஆர்.எஸ்.மணி அவர்கள் நம்ம பதிவில் உங்களுடைய பாடலை சிலாகித்து எழுதியிருக்கிறார் அருட்பெருங்கோ.

    அவர் சிறந்த பாடகர்;
    சிறந்த இசையமைப்பாளர்.

    /

    ஆமாம் மதுமிதா வாசித்தேன். உங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும் ;-)

  25. அருட்பெருங்கோ Says:

    /Arul,

    You may send the music track to my email address: raghava.mani@gmail.com.

    I like the music and would like to record the voice over - as a solo male voice.

    At present I am busy preparing for my India trip. Would like to do the song on my return.

    R.S.Mani/

    plz take the karaoke from
    http://arutperungo.googlepages.com/chirimusic.zip

  26. அருட்பெருங்கோ Says:

    /அழகான படல் வரிகள் மனதைத் திருடும் இசை :))) அருமை அருள் !! எனக்கும் கரோக்கி அனுப்புங்க அருள் . :)))/

    நன்றி நவீன். :)

    கரோக்கி எனது கூகிள் பக்கத்தில் உள்ளது அதன் சுட்டீ மேலே கொடுத்திருக்கேன்

  27. அருட்பெருங்கோ Says:

    /படித்தேன்..கேட்டேன்..பாடியும் பார்த்தேன்…/

    நீங்க தான் இசைப் பிரியனாச்சே சொல்லனுமா?? ;)

    /நல்லதொரு அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி,அருள்…/

    நல்ல அனுபவம்னு சொல்லிட்டீங்க நன்றீ :)

  28. அருட்பெருங்கோ Says:

    /மதுமிதாவின் தளத்தின் மூலம் உங்கள் தளம் எனக்கு அறிமுகம். நன்றாக வார்த்தைகளை உங்கள் கவிதையில் பாவித்திருக்கின்றீர்கள். கவிதையில் உயிர்ப்பு இருக்கின்றது.
    வாழ்த்துக்கள்./

    நன்றி காரூரான். வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!

  29. SurveySan Says:

    அருட்பெருங்கோ, இத்த பாருங்கோ.

    http://neyarviruppam.blogspot.com/2007/10/13.html

  30. yazh Says:

    inimaiyan vrigal.

    yaravathu tamil kondu varalame/

    நன்றி அனானி ( தயவு செய்து பெயர் குறிப்பிடுங்களேன் :))

    mannikkavum
    aluvalagathil
    avasaramaga pinuttam kodukkumpothu
    peyar adikka nearam illai.
    miga arumaiyaga poruntha koodiya varigal.
    matrapadi nan palamurai yochipathu undu.
    intha paadalai ilayaraja tamilil ean muyarchikkavillai endru.
    Oru Chiri Kandaal (Composed by: Ilaiyaraja for the Malayalam movie Ponmudi Puzhayorathu)
    ippothu sariyana tamil varigal kidaithullathu.
    tamilil kondu varalame..

  31. சுல்தான் Says:

    அருட்பெருங்கோ,
    நல்ல முயற்சி. பாடிப் பார்த்த போது எனக்கு பாடத்தெரியாமல் தட்டும் சில இடங்களில் உங்கள் வார்த்தைகளையே கொஞ்சம் மாற்றிப் போட்டு பாட முயற்ச்சிக்கிறேன். சரி வருமா?

    மதுமிதா,
    அந்தக் கடைசி பாராவையும் எழுதி பின்னூட்டுங்களேன். நன்றாயிருக்கிறது.

  32. அருட்பெருங்கோ Says:

    /அருட்பெருங்கோ, இத்த பாருங்கோ.

    http://neyarviruppam.blogspot.com/2007/10/13.html/

    பார்த்தேன் சர்வேசன்… போட்டியெல்லாம் வச்சிட்டீங்க… பார்ப்போம் என்ன நடக்குதுன்னு :)

  33. அருட்பெருங்கோ Says:

    /mannikkavum
    aluvalagathil
    avasaramaga pinuttam kodukkumpothu
    peyar adikka nearam illai.
    /

    ஓ… சரிங்க யாழ்!!!

    /miga arumaiyaga poruntha koodiya varigal.
    matrapadi nan palamurai yochipathu undu.
    intha paadalai ilayaraja tamilil ean muyarchikkavillai endru.
    Oru Chiri Kandaal (Composed by: Ilaiyaraja for the Malayalam movie Ponmudi Puzhayorathu)
    ippothu sariyana tamil varigal kidaithullathu.
    tamilil kondu varalame../

    நம்ம வலைப்பதிவர்கள் பாடிடுவாங்க கவலைப் படாதீங்க :))

  34. அருட்பெருங்கோ Says:

    /அருட்பெருங்கோ,
    நல்ல முயற்சி. பாடிப் பார்த்த போது எனக்கு பாடத்தெரியாமல் தட்டும் சில இடங்களில் உங்கள் வார்த்தைகளையே கொஞ்சம் மாற்றிப் போட்டு பாட முயற்ச்சிக்கிறேன். சரி வருமா?/

    இசையோடு பாடுங்கள் சுல்தான் வார்த்தைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!!!

    /மதுமிதா,
    அந்தக் கடைசி பாராவையும் எழுதி பின்னூட்டுங்களேன். நன்றாயிருக்கிறது./

    அவங்க முழு பாட்டையுமே போட்டுட்டாங்கப்பா… இங்க

  35. யாழ்_அகத்தியன் Says:

    அருமை அருட்பெருங்கோ
    மிக மிக இனிமை!

    எனக்கும் அந்தப் பாடலைக் கேட்டு
    கிறுக்கனும் போல தோணிச்சு

    நான் கிறுக்கிய பாடல் மாதிரியான
    பாடல் வரிகள் இதோ

    “காதல் வந்தால் கவிவந்தால்
    மிக அழகு இரவு வந்தால் நிலவு
    பூத்தால் பேரழகு நீ வந்தால்
    உன் நினைவிருந்தால் கோடியழகு…..

    மலரும் பூ முகமே
    உன் கண்கள் இமைத்தால்
    உன் இதழ்கள் பிரிந்தால்
    என் காயமாறுமே கண்ணே

    கொஞ்சிடும் உலகமிது கெஞ்சிடும்
    இதழ் எனக்கு பக்கம் வந்துவிடு
    பாவையே முத்தமிடு பாத்திருக்க
    கொள்ளையிடு பள்ளியறை நேரமிது
    படித்திட வா…. படிப்பிக்க வா..”

    தொடர்ந்தும் முழுமையாக
    என் பாடல்வரியை
    பாடிப்பார்க்க http://nizalkal.blogspot.com/2007/11/01.html

  36. geethamurugesh Says:

    Arutperungo your lyric and the tune of Raja synchronise very nicely and words are also very pleasent. Happy to get introduction of a nice blog from Madhumitha. GeethaMurugesh

  37. அருட்பெருங்கோ Says:

    யாழ் அகத்தியன்,

    இந்த பதிவு பல பதிவர்களை பாடல் எழுத தூண்டியிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. வாழ்த்துகள் இன்னும் தொடருங்கள்.

  38. அருட்பெருங்கோ Says:

    / Arutperungo your lyric and the tune of Raja synchronise very nicely and words are also very pleasent. Happy to get introduction of a nice blog from Madhumitha. GeethaMurugesh/

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் கீதா.
    என்னுடைய முதல் வலைப்பதிவு http://blog.arutperungo.com/

  39. நாடோடி இலக்கியன் Says:

    //திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா//

    என்ன சொல்றது,உங்களின் அற்புதமான இந்த வரிகளால் மெய்சிலிர்த்துப் போனேன்(ஆமா இன்னும் என்ன தாமதம்?களத்தில குதிக்க வேண்டியதுதானே)!!!

  40. Anonymous Says:

    I just happened to slip into ur blog while searching for ‘Oru Chiri Kandal’ song.. Dumbstruck by ur work..Amazing composition - words sync so well with the origianl tune..Keep it up.. and Hats off for the most unique endeavor..

    Bhuvana

  41. அருட்பெருங்கோ Says:

    / என்ன சொல்றது,உங்களின் அற்புதமான இந்த வரிகளால் மெய்சிலிர்த்துப் போனேன்(ஆமா இன்னும் என்ன தாமதம்?களத்தில குதிக்க வேண்டியதுதானே)!!! /
    ரொம்பவே புகழ்றீங்களே, நாடோடி இலக்கியன்.

    எந்த களத்தில் குதிக்க சொல்றீங்கனு புரியலையே :(

  42. அருட்பெருங்கோ Says:

    / I just happened to slip into ur blog while searching for ‘Oru Chiri Kandal’ song.. Dumbstruck by ur work..Amazing composition - words sync so well with the origianl tune..Keep it up.. and Hats off for the most unique endeavor..

    Bhuvana/

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி புவனா.

  43. Girl of Destiny Says:

    Splendid work!!! பாடிப் பார்த்தேன்… மிகவும் நன்றாக வந்தது… :-)

  44. அருட்பெருங்கோ Says:

    /Splendid work!!! பாடிப் பார்த்தேன்… மிகவும் நன்றாக வந்தது… :-)/

    நன்றிங்க girl of destiny!!!
    பாடினத அப்படியே ஒரு பதிவா போடுங்க :)

  45. Lakshmanans Says:

    dear arutperngo….very super very super…give ur email id. i want to see you man..before i dead…
    bcz i like this song for last 3 year…today i got this song from ur site..

    give ur mobile no. i want to chat with you for trying this work…

    but one sad…i need mp3 songs… for download for my mobile…

    with love
    lakshmanan.s
    chennai

Leave a Reply