குறு நகை கண்டால்… பறவையே எங்கு இருக்கிறாய்?
Nov 15

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தெலுங்கில் முன்னா என்ற படத்தில் வந்த பாட்டின் மெட்டுக்கு என்னால் முடிந்த தமிழ் வரிகள் :)

( ஆண் பெண் )

சகியே…என்னெல்லாம் வேண்டும் சொல்லம்மா
சகியே…எண்ணாமல் சொன்னாலென்னம்மா

எல்லாம் எல்லாம் என் எண்ணம் போலே தந்தாலும்
ஏதோ ஏதோ என்னெஞ்சம் இன்னும்கெஞ்சும்ம்ம்…

ஒ பெண்ணே மெல்லினப் பெண்ணே… நீகேட்டா இல்லையென்பேன்
நீ தோட்டப் பூக்க ளானால் நானங்கு வேராய் ஆவேன்
ஒ பெண்ணே மெல்லினப் பெண்ணே… நீ தானே வேர்களானால்
நான் உனக்கு நீராய்ப்பாய்வேன்… உயிருரமாய் ஆவேன்

(சகியே…)

பூ… வைப்… போ… லென இருந்தேன்… பூ… வாய்… மா… றிட மலர்ந்தேன்
நீ… யிருக்… கும்ம்…ஒரு கணமே… பூத்… திருக்… கும்ம்… சிறு மனமே
அழகா அழகா அதி யழகா…பூக்கச்செய்தாய் எ(ன்)னை அழகாய்..
நீ…பூக்கச்செய்தாய் எ(ன்)னை அழகாய்

ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே… சிரித்தாலே மல்லிகை தானா
கன்னங்கள் ரோஜாதானா… பூமுகத்தில் தாமரை தானா
ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே… செந்தேகம் செண்பகம் தானா
மெய்யெங்கும் பூக்கள் தானா… நீ பூங்கா தானா

(சகியே…)

ஸ்நே… கித… நதி… யென நுழைந்தேன்… மன… திலும்… கட… லென அலைந்தேன்
நீ… பிரி… யும்ம்… சிறு பொழுதில்ல்… நான்… பறந்… தேன்… முகி லுருவில்ல்
குளிரால் குளிரால் நேசக் குளிரால்… பொழியச்செய்தாய் காதல் மழையாய்
எனை… பொழியச்செய்தாய் காதல் மழையாய்

ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே உன் உருவம் இமையில்கொண்டேன்
உன் கனவே இரவில்கண்டேன் உன் நினைவே பகலில்கொண்டேன்
ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே உன் ஸ்பரிசம் மனசில்கண்டேன்
நம் காதல் உயிரில் கொண்டேன் நமதுயிரில் கொண்டேன்

(சகியே…)

தெலுங்குப் பாடலைக் கேட்க :


Get Your Own Music Player at Music Plugin

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout