தென்றல்.காம் இணையத்தமிழ் வானொலி அதன் நிகழ்ச்சிகளை பாட்காஸ்டிங் செய்தியோடைகளாக வழங்குகிறது. அதனை ஸ்ப்ரிங் விட்ஜெட் மூலமாக நமது வலைப்பதிவுகளில் இணைத்துக் கொள்ள முடியும், இந்த வலைப்பதிவின் பக்கப்பட்டியில் உள்ளதுபோல. சில செய்தியோடைகளை மட்டும் நான் இணைத்துக்கொண்டேன். அனைத்து செய்தியோடைகளையும் இணைத்துக்கொண்டால் உங்கள் வலைப்பதிவிலேயே சிறிய வானொலி இயங்கத் தொடங்கி விடும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு செய்தியோடை வழங்கப்பட்டிருக்கிறது. கீழே படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள அம்புக்குறிகளை சொடுக்கி வெவ்வேறு நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொள்ளலாம். நான் இணைத்துக்கொண்டவை - தினம் ஒரு திருக்குறள், மெட்டுக்கள் புதுசு, கிராமியப்பாடல்கள், நேயர்விருப்பம், பழையபாடல்கள், நாட்டியபாடல்கள்.
பாடல் : ஏமாய்ந்தி ஈ வேளா
படம் : ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : உதித் நாராயண்
வரிகள் : குலசேகர்
மெட்டுக்கேற்ற எனது தமிழ் வரிகள் கீழே.
நா.முத்துக்குமாரின் வரிகள் யாரடி நீ மோகினி படத்தில் உள்ள ‘எங்கேயே பார்த்த நெருக்கம்’ பாடலாக…
Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes
ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே
கவிதை வடிவிலொரு சிற்பம்
கொஞ்சம்கெஞ்சவைக்குமவள் கோபம்
இரும்பு இதயம் இழுக்கும் காந்தம்
உயிரைவந்து உலுக்கும் உருவம்
மறுபடியும் எனது ஜனனம்
மனதிலெங்கும் காதல் மலரும்
சிறுபிள்ளை இழுத்துப்போகும் நூல்வண்டி போலானேன்
இவளுக்கொரு அடிமைபோல கூட கூட கூட போகிறேன்
அசையுமழகு விரல்களாலே ஆவியெடுத்துப் போகிறாள்
இதயம்திறந்து பார்த்துவிட்டு என்னவிலையென்று கேட்கிறாள்
இதோஇதோ இப்பொழுதே இனாமாக இதயம் தந்தேன்
அவளின் கண்கள் தாளம்போட
அலையும் கூந்தல் கவிதைபாட
எனது இதயம் நடனம் ஆட
உதடு ஏதோ உளறல்தேட
ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே
நாளும் நட்சத்திரம் பார்த்து
பெண் தேடிப்போகும் வலி இல்லை.
தேவ தேவதை போன்ற
ஒரு பெண்ணை இழக்கும் வழியேதுமில்லை.
கிலுகிலுப்பை ஆட்டும்போது அழ மறந்த குழந்தைபோல
அவள்முகத்தை பார்க்கும்போது எனைமறந்துபோகின்றேன்
களவு செய்தே கைதும் செய்தாள்
நின்று கொண்டே நடக்க வைத்தாள்
கண்கள் இரண்டும் சிரிக்க வைத்தாள்
மௌனமாக பேசவைத்தாள்
தெலுங்கு பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
பாடல் : ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே
படம் : குஷி
இசை : மணி சர்மா
குரல் : முரளிதர்
வரிகள் : பிங்காலி நாகேந்திரராவ்.
மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் கீழே :
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….
இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தெலுங்கு பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
பாடல் : அய்யய்யோ
படம் : பருத்தி வீரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல்கள் : கிருஷ்ணராஜ், மாணிக்கவிநாயகம், ஷ்ரேயாகோஷல், யுவன்சங்கர் ராஜா
வரிகள் : ???
ஏலே…ஏ..லே..லே…லே…
ஏலே…ஏ…லே..லே…லே…
ஒத்தப்பன மரத்துல செத்த நேரம் ஒம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன் சங்கதியை சொல்லித் தரேன் வாடீ… நீ வாடீ…
பத்து கண்ணு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ள கூச்சமிங்கு தேவையில்லை.. வாடீ.. நீ வாடீ..
ஏலே…ஏ..லே..லே…லே…
ஏலே…ஏ…லே..லே…லே…
செவ்வெளனி சின்ன கனி..ஒன்ன செறையெடுக்க போறேன் வா நீ..
அய்யய்யோ யேன் உசுருக்குள்ளே தீயை வச்சான் அய்யய்யோ..
யென் மனசுக்குள்ளே நோயத் தச்சான் அய்யய்யோ..
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள
அய்யய்யோ .. யேன் வெக்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ
யென் சமஞ்ச தேகம் சாயுறதே அய்யய்யோ
அரளி வெத வாசக்காரி..ஆளக் கொல்லும் பாசக்காரி..
யேன் உடம்பு நெஞ்ச கீறி.. நீ உள்ள வந்த கெட்டிக்காரி..
அய்யய்யோ.. யென் இடுப்பு வேட்டி எறங்கி போச்சி அய்யய்யோ
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே அய்யய்யோ
கல்லுக்குள்ள தேர போல.. வளஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா
காலச் சுத்தும் நெழலப் போல..பொட்ட காட்டில் ஒங்கூடவே தங்கிடவா
அய்யனாரப் பாத்தாலே ஓன் நெனப்பு தாண்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏண்டா
நான் வாடா மல்லி.. நீ போடா அள்ளி..
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே.. நீ தொட்டா அருவா கரும்பாகுதே
ஏ தொரட்டிக் கண்ணு கருவாச்சியே.. நீ தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி ஓன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேம் புள்ள
நீ கொன்னாக் கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள
பாடலைக் கேட்க :
பாடல் - ஏன் எனக்கு மயக்கம்
படம் - நான் அவன் இல்லை
குரல்கள் - ஜெயதேவ், சங்கீதா ராஜேஷ்வரன்
இசை - விஜய் ஆண்டனி
வரிகள் - ???
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு…ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு…
ஏ… இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்… ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்…
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு…
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு….
சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க…
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட…
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற…
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊ..ட்டிட…
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்…
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்…
உள்ளங்கையில் உன்னைத் தாங்கி வாழ சம்மதம்…
உன்னைத் தோளில் சாய்த்துக் கொண்டு போக சம்மதம்….
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு…
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு….
காதல் என்னும் பூங்காவனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா…
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா…
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா…
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா…
லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்டபோது தன்னை நேரில் பார்க்கிறேன்…
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்…
உன்னைக் காதல் செய்து காதல்செய்தே கொல்லப் போகிறேன்…
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு…
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு….
ஏ… இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு…
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு…
பாடலைக் கேட்க :
பாடல் : யாரோ யாருக்குள்
படம்: சென்னை 600 0028
இசை: யுவன் சங்கர் ராஜா
குரல் : எஸ்பிபி, சித்ரா
வரிகள் : வாலி
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க்காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
ஓஹோ…
நின்றாய் இங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பேவா…. ஏஹே
யாரோ..
ம் ஆஹா
யாருக்குள் இங்கு யாரோ
ஹ்ம்ம்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய் விடும்
காதல் கொண்டு பேசும் போது
சென்னைத் தமிழும் செந்தேன்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வாஆ… ஹா…
யாரோ..
ம்ம் ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
பாடலைக் கேட்க :
|
தமிழ்த்தாய் வாழ்த்து :
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்
பொருள் :
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும்
சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்
தென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
பாடல் : இஷ்டம் இஷ்டம்
படம் : அம்ருதம் (மலையாளம்)
இசை : ஜெயச்சந்திரன்
குரல் : சித்ரா
வரிகள் : கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி
மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் இங்கு
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு
நெருங்கிவரும் பொழுதினில் விரல்பேசவும்
தூரம்போகும் வேளையில் தொலைபேசவும்
பகலொன்றில் நீசிந்தும் பனிமுத்தமும்
தீராத இரவிலுன் தோள்சாயவும்
கனவுகளாய் என் கண்களினில்
உள்ளே முழுதும் நீதான்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
கண்ணோர கனவிலும் கதைபேசவும்
கொண்டாடும் விழியினில் குடியேறவும்
கடற்கரை நடையினில் விரல்பின்னவும்
காதோடு இழைகின்ற இசையாகவும்
எந்நேரமும் உன்னோடுதான்
உயிராக சேர்கிறேன் நான்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு
பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
பாடல் : நாலோ ஊஹலக்கு
படம் : சந்தமாமா
இசை : கே.எம். இராதாகிருஷ்ணன்.
குரல் : ஆஷா போஸ்லே
வரிகள் : ஆனந்த் ஸ்ரீராம்.
(மெட்டுக்கு ஏற்ற(?) எனது தமிழ் வரிகள் கீழே…)
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்…
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
விரல்களும் துடிக்குதே
கண்களும் சிதறுதே
இதயமும் நடுங்குதே
உயிரெலாம் உதிருதே
பார்வைகூட மறையும் நேரம் இமையில் உன்முகம்பார்த்து…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
புன்னகையில் அழுகிறேன்
கண்ணீரில் சிரிக்கிறேன்
குரலினில் உடைகிறேன்
மௌனமாய் அழிகிறேன்
உன்னைக் காணும் கடைசி முறையில் உடையும் வார்த்தைகள்…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்….
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பாடலைக் கேட்க:
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
பாடல் : காதல் வைத்து காதல் வைத்து
படம் : தீபாவளி
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : விஜய் யேசுதாஸ்
வரிகள் : நா.முத்துக்குமார்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் அய்யோ தொலைந்தேன்
( காதல் வைத்து )
தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்
( காதல் வைத்து )
உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
( காதல் வைத்து )
Recent Comments