Feb 29
தென்றல்.காம் இணையத்தமிழ் வானொலி அதன் நிகழ்ச்சிகளை பாட்காஸ்டிங் செய்தியோடைகளாக வழங்குகிறது. அதனை ஸ்ப்ரிங் விட்ஜெட் மூலமாக நமது வலைப்பதிவுகளில் இணைத்துக் கொள்ள முடியும், இந்த வலைப்பதிவின் பக்கப்பட்டியில் உள்ளதுபோல. சில செய்தியோடைகளை மட்டும் நான் இணைத்துக்கொண்டேன். அனைத்து செய்தியோடைகளையும் இணைத்துக்கொண்டால் உங்கள் வலைப்பதிவிலேயே சிறிய வானொலி இயங்கத் தொடங்கி விடும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு செய்தியோடை வழங்கப்பட்டிருக்கிறது. கீழே படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள அம்புக்குறிகளை சொடுக்கி வெவ்வேறு நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொள்ளலாம். நான் இணைத்துக்கொண்டவை - தினம் ஒரு திருக்குறள், மெட்டுக்கள் புதுசு, கிராமியப்பாடல்கள், நேயர்விருப்பம், பழையபாடல்கள், நாட்டியபாடல்கள்.
February 29th, 2008 at 3:57 am
வலைதளமே புதுப்பொலிவோட பட்டயக் கெளப்புதே….. வாழ்த்துக்கள்
February 29th, 2008 at 6:24 am
நன்றி தல