Jun 26
வழக்கம்போல இன்னொரு தெலுங்கு மெட்டுக்கான எனது தமிழ் வரிகள்!
படம் : வான
இசை : கமலாக்கர்
குரல் : ரஞ்சித், சித்ரா
தெலுங்கு வரிகள் : சீத்தாராம சாஸ்திரி
தமிழில் :
ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்தது
கைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னது
கவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… - ஒரு கண்ணில்
பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்
பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்
இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… - ஒரு கண்ணில்
இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்
இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்
மனசே புவியாக… காதல் நிலவாக… - ஒரு கண்ணில்
June 26th, 2008 at 6:41 pm
Varigal nandraaga prunthi ullathu…. Payanam thodara vazhthukkal…. :)…
June 27th, 2008 at 9:29 am
நன்றிங்க கவிதா! யாருமே பாட்ட கேட்கல போலன்னு நெனச்சேன். நீங்க ஒருத்தராவது கேட்டிருக்கீங்க
July 15th, 2008 at 12:08 pm
Hi Siva,
How r u?
Lines ellame superb….
Nalla iruku…..
yarum kekalanu ninacheingala athan kavithakuda nanum sernthuten…
July 30th, 2008 at 4:08 pm
நல்லாருக்கேங்க.
ம்ம்ம் நன்றி சோஃபியா
August 8th, 2008 at 5:15 am
நல்லா இருக்குங்க…நான் பாடிக் கூட பார்த்தேன்!