Mar 05

பாடல் : நானாக நானில்லை தாயே
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
இசை : இளையராஜா
குரல் : எஸ்.பி.பி

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை

(நானாக)

பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

written by அருட்பெருங்கோ

Feb 25

பாடல் : யாரோ யாருக்குள்
படம்: சென்னை 600 0028
இசை: யுவன் சங்கர் ராஜா
குரல் : எஸ்பிபி, சித்ரா
வரிகள் : வாலி

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க்காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ…
நின்றாய் இங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பேவா…. ஏஹே

யாரோ..

ம் ஆஹா
யாருக்குள் இங்கு யாரோ

ஹ்ம்ம்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய் விடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னைத் தமிழும் செந்தேன்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வாஆ… ஹா…

யாரோ..
ம்ம் ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

பாடலைக் கேட்க :

Get this widget Track details eSnips Social DNA

written by அருட்பெருங்கோ

Aug 22

பாடல் : பாடிப் பறந்த கிளி
படம் : கிழக்கு வாசல்
இசை : இளையராஜா
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : ஆர் வி உதயகுமார்

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

(பாடிப் பறந்த)

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கணட கனவு அது காணாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
வீணாச தந்தவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

பாடலைக் கேட்க


Music Plugin தளத்தில் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

written by அருட்பெருங்கோ

Aug 21

பாடல் : மலையோரம் வீசும் காத்து
படம் : பாடு நிலாவே (1987)
இசை : இளையராஜா
குரல் : எஸ்.பி.பி

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா

குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா
சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ

Aug 08

பாடல் : தேவதை இளந்தேவி
படம் : ஆயிரம் நிலவே வா
குரல் : எஸ்.பி.பி
இசை : இளையராஜா

தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா
தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ…. நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லம் எந்தன் பேர் சொல்லாதோ
பூவசந்தமே நீமறந்ததேன் ஆற்றுமணல் மேடையிலே
நான்வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம் பாடி
தேகம் வாடி பாடும் சோகம் கோடி

தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா

எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவத
விதியென்பதா சதியென்பதா சொந்தமுள்ள காதலியே
வற்றி விட்ட காவிரியே உந்தனாவியய் நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி இவன் தேயும் தேடி
கண்ணிர் யாதி நீதான் எந்தன் பாதி

தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா ஓ….நீயில்லாமல் நானா
ஓ….நீயில்லாமல் நானா ஓ….நீயில்லாமல் நானா

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

written by அருட்பெருங்கோ

Jul 27

பாடல் : நலம் வாழ என்னாளும்
படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…

(நலம் வாழ)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ