Feb 28
பாடல் : ஏமாய்ந்தி ஈ வேளா
படம் : ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : உதித் நாராயண்
வரிகள் : குலசேகர்
மெட்டுக்கேற்ற எனது தமிழ் வரிகள் கீழே.
நா.முத்துக்குமாரின் வரிகள் யாரடி நீ மோகினி படத்தில் உள்ள ‘எங்கேயே பார்த்த நெருக்கம்’ பாடலாக…
Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes
ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே
கவிதை வடிவிலொரு சிற்பம்
கொஞ்சம்கெஞ்சவைக்குமவள் கோபம்
இரும்பு இதயம் இழுக்கும் காந்தம்
உயிரைவந்து உலுக்கும் உருவம்
மறுபடியும் எனது ஜனனம்
மனதிலெங்கும் காதல் மலரும்
சிறுபிள்ளை இழுத்துப்போகும் நூல்வண்டி போலானேன்
இவளுக்கொரு அடிமைபோல கூட கூட கூட போகிறேன்
அசையுமழகு விரல்களாலே ஆவியெடுத்துப் போகிறாள்
இதயம்திறந்து பார்த்துவிட்டு என்னவிலையென்று கேட்கிறாள்
இதோஇதோ இப்பொழுதே இனாமாக இதயம் தந்தேன்
அவளின் கண்கள் தாளம்போட
அலையும் கூந்தல் கவிதைபாட
எனது இதயம் நடனம் ஆட
உதடு ஏதோ உளறல்தேட
ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே
நாளும் நட்சத்திரம் பார்த்து
பெண் தேடிப்போகும் வலி இல்லை.
தேவ தேவதை போன்ற
ஒரு பெண்ணை இழக்கும் வழியேதுமில்லை.
கிலுகிலுப்பை ஆட்டும்போது அழ மறந்த குழந்தைபோல
அவள்முகத்தை பார்க்கும்போது எனைமறந்துபோகின்றேன்
களவு செய்தே கைதும் செய்தாள்
நின்று கொண்டே நடக்க வைத்தாள்
கண்கள் இரண்டும் சிரிக்க வைத்தாள்
மௌனமாக பேசவைத்தாள்
தெலுங்கு பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
written by அருட்பெருங்கோ
Feb 27
பாடல் : ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே
படம் : குஷி
இசை : மணி சர்மா
குரல் : முரளிதர்
வரிகள் : பிங்காலி நாகேந்திரராவ்.
மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் கீழே :
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….
இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தெலுங்கு பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
written by அருட்பெருங்கோ
Feb 18
பாடல் : நாலோ ஊஹலக்கு
படம் : சந்தமாமா
இசை : கே.எம். இராதாகிருஷ்ணன்.
குரல் : ஆஷா போஸ்லே
வரிகள் : ஆனந்த் ஸ்ரீராம்.
(மெட்டுக்கு ஏற்ற(?) எனது தமிழ் வரிகள் கீழே…)
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்…
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
விரல்களும் துடிக்குதே
கண்களும் சிதறுதே
இதயமும் நடுங்குதே
உயிரெலாம் உதிருதே
பார்வைகூட மறையும் நேரம் இமையில் உன்முகம்பார்த்து…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
புன்னகையில் அழுகிறேன்
கண்ணீரில் சிரிக்கிறேன்
குரலினில் உடைகிறேன்
மௌனமாய் அழிகிறேன்
உன்னைக் காணும் கடைசி முறையில் உடையும் வார்த்தைகள்…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்….
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பாடலைக் கேட்க:
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
written by அருட்பெருங்கோ
Jan 28
படம் : துளசி (தெலுங்கு)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
குரல் : சித்ரா, சாகர்
வரிகள் : பாஸ்கரபட்லா
இந்தப் பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள். தெலுங்கு பாடலின் மெட்டுக்கு தமிழ் வரிகள் பொருந்துகின்றனவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்
உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
கண்டோமே ஓரோவியம்
உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி
செய்தோமே சிறுகாவியம்
கனாவில் கனாவில் மனம் என்னிடமில்லை
உன்னோடு உலா போய் வரும்
உலாவில் உலாவில் உடல்தானே இருக்கும்
பறந்தோடும் மனம் உன்னிடம்
(உன் கண்ணில்பாதி…)
நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?
கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
கைதாக கண்தேடி நானாக வந்தேன்
என்சிறையும் நீயல்லவா?
(உன் கண்ணில்பாதி…)
விரலாக நானும் ஒரு தூவல்* நீயும்
காதலும் கவிதையே எழுத லாமா?
சிறகாக நானும் சிறு பறவை நீயும்
ஒன்றாக வானிலே பறக்க லாமா?
உன்தேகம் சிறகாக வந்தாலே நோகும்
என்னுள்ளே உயிராக்கி நான் சுமக்கவா?
சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
சிறகிலொரு இறகாகவா?
(உன் கண்ணில்பாதி…)
*தூவல் - பேனா
தெலுங்குப் பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
written by அருட்பெருங்கோ
Nov 15
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தெலுங்கில் முன்னா என்ற படத்தில் வந்த பாட்டின் மெட்டுக்கு என்னால் முடிந்த தமிழ் வரிகள்
( ஆண் – பெண் )
சகியே…என்னெல்லாம் வேண்டும் சொல்லம்மா
சகியே…எண்ணாமல் சொன்னாலென்னம்மா
எல்லாம் எல்லாம் என் எண்ணம் போலே தந்தாலும்
ஏதோ ஏதோ என்னெஞ்சம் இன்னும்கெஞ்சும்ம்ம்…
ஒ பெண்ணே மெல்லினப் பெண்ணே… நீகேட்டா இல்லையென்பேன்
நீ தோட்டப் பூக்க ளானால் நானங்கு வேராய் ஆவேன்
ஒ பெண்ணே மெல்லினப் பெண்ணே… நீ தானே வேர்களானால்
நான் உனக்கு நீராய்ப்பாய்வேன்… உயிருரமாய் ஆவேன்
(சகியே…)
பூ… வைப்… போ… லென இருந்தேன்… பூ… வாய்… மா… றிட மலர்ந்தேன்
நீ… யிருக்… கும்ம்…ஒரு கணமே… பூத்… திருக்… கும்ம்… சிறு மனமே
அழகா அழகா அதி யழகா…பூக்கச்செய்தாய் எ(ன்)னை அழகாய்..
நீ…பூக்கச்செய்தாய் எ(ன்)னை அழகாய்
ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே… சிரித்தாலே மல்லிகை தானா
கன்னங்கள் ரோஜாதானா… பூமுகத்தில் தாமரை தானா
ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே… செந்தேகம் செண்பகம் தானா
மெய்யெங்கும் பூக்கள் தானா… நீ பூங்கா தானா
(சகியே…)
ஸ்நே… கித… நதி… யென நுழைந்தேன்… மன… திலும்… கட… லென அலைந்தேன்
நீ… பிரி… யும்ம்… சிறு பொழுதில்ல்… நான்… பறந்… தேன்… முகி லுருவில்ல்
குளிரால் குளிரால் நேசக் குளிரால்… பொழியச்செய்தாய் காதல் மழையாய்
எனை… பொழியச்செய்தாய் காதல் மழையாய்
ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே உன் உருவம் இமையில்கொண்டேன்
உன் கனவே இரவில்கண்டேன் உன் நினைவே பகலில்கொண்டேன்
ஓ பெண்ணே மெல்லினப் பெண்ணே உன் ஸ்பரிசம் மனசில்கண்டேன்
நம் காதல் உயிரில் கொண்டேன் நமதுயிரில் கொண்டேன்
(சகியே…)
—
தெலுங்குப் பாடலைக் கேட்க :
Get Your Own Music Player at Music Plugin
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
written by அருட்பெருங்கோ
Aug 04
பாடல் : அண்டங்கா லேனா (தெலுங்கு) சொர்க்கம் போவேனா (தமிழ்)
படம் : கோதாவரி (தெலுங்கு)
இசை : கே. எம். ராதாகிருஷ்ணன்
குரல் : சுனிதா
தமிழ் வரிகள் : அருட்பெருங்கோ ( இது தெலுன்ங்குப் பாடலின் மொழிபெயர்ப்பல்ல. மெட்டுக்கு பாட்டெழுதும் என் கன்னி முயற்சி
)
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
கண்கள் மருகிப்பார்த்து… கைகள் இறுகிச்சேர்த்து… உதடு நான்கும்நாணி… முத்தமிட்டதே
வெட்கம் சிவந்துபோக… நாணம் நடுங்கி சாக… காதல்கன்னி உன்னைத்… தொட்டுவிட்டதே
முத்தங்கள் திண்டாடி… முடிகின்ற வேளை… முகம்தொடங்கி நகம்வரையும்… நீதொட்டு மெய்பட்டு என்தேகம் என்னாகுமோ
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
இமைகள் மூடிக்கிடக்க… இதழும் தேடித்திறக்க… இரவுக் களிகள் நடத்த….உயிரும்பூக்குது
காதல் நம்மை நோக்க… கூந்தல் எடையும் சாய்க்க…விரலும் நகமும் தைக்க… காமம்பூக்குது
இரவெல்லாம் போராடி… ஐம்புலனும் வெல்லும்… அதிகாலை புதுவேளை… அப்போது மென்னோடு ஒன்றாக நீராடவா
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
்தெலுங்குப் பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
written by அருட்பெருங்கோ
Recent Comments