வழக்கம்போல இன்னொரு தெலுங்கு மெட்டுக்கான எனது தமிழ் வரிகள்!
படம் : வான
இசை : கமலாக்கர்
குரல் : ரஞ்சித், சித்ரா
தெலுங்கு வரிகள் : சீத்தாராம சாஸ்திரி
தமிழில் :
ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்தது
கைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னது
கவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… - ஒரு கண்ணில்
பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்
பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்
இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… - ஒரு கண்ணில்
இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்
இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்
மனசே புவியாக… காதல் நிலவாக… - ஒரு கண்ணில்
சின்ன சின்னதாய் சிலிர்த்திடும் சில கனவுகள்
செல்ல செல்லமாய் எனக்குள்ள் சிறு சாரல்கள்
கனவுகள்…. உன் கண்கள் சேருமா?
சாரலில்… உன் இதயம் நனையுமா?காதல் பூக்கள் கண்கள் போலே பூக்க வைத்தேன்
பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி வைத்தேன்
நீ வரும்வழியில்… உன் கருவிழியும்… வண்டாகுமோ… கொண்டாடுமோ(சின்ன சின்னதாய்)
காற்றைக் கூட பாடல் மூலம் உழுது வைத்தேன்
காதல் கவிதை எந்தன் இதழில் எழுதி வைத்தேன்
உன் பூவிதழும்… உன் தேனிதழும்… இசையாகுமோ… கவிசேருமோ
(சின்ன சின்னதாய்)
கனவில் வந்தாய் கன்னக் குழியில் நழுவ பார்த்தேன்
காலைப் பனியில் காதல் கலந்து மழை வார்த்தேன்
உன் கல்மனசும்… என் நிலமாகும்…. மண்வாசனை… உண்டாகுமோ
பாடல் : ஏமாய்ந்தி ஈ வேளா படம் : ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே இசை : யுவன் சங்கர் ராஜா குரல் : உதித் நாராயண் வரிகள் : குலசேகர்
மெட்டுக்கேற்ற எனது தமிழ் வரிகள் கீழே. நா.முத்துக்குமாரின் வரிகள் யாரடி நீ மோகினி படத்தில் உள்ள ‘எங்கேயே பார்த்த நெருக்கம்’ பாடலாக…
Can you feel her? Is your heart speaking to her? Can you feel the love? Yes
ஏதேதோ பேசும் என்னை எதிரே அவள் வந்தவேளை நிலா நிலா நிலா போலதானே தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே
கவிதை வடிவிலொரு சிற்பம் கொஞ்சம்கெஞ்சவைக்குமவள் கோபம் இரும்பு இதயம் இழுக்கும் காந்தம் உயிரைவந்து உலுக்கும் உருவம் மறுபடியும் எனது ஜனனம் மனதிலெங்கும் காதல் மலரும்
சிறுபிள்ளை இழுத்துப்போகும் நூல்வண்டி போலானேன் இவளுக்கொரு அடிமைபோல கூட கூட கூட போகிறேன் அசையுமழகு விரல்களாலே ஆவியெடுத்துப் போகிறாள் இதயம்திறந்து பார்த்துவிட்டு என்னவிலையென்று கேட்கிறாள் இதோஇதோ இப்பொழுதே இனாமாக இதயம் தந்தேன்
அவளின் கண்கள் தாளம்போட அலையும் கூந்தல் கவிதைபாட எனது இதயம் நடனம் ஆட உதடு ஏதோ உளறல்தேட
ஏதேதோ பேசும் என்னை எதிரே அவள் வந்தவேளை நிலா நிலா நிலா போலதானே தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே
நாளும் நட்சத்திரம் பார்த்து பெண் தேடிப்போகும் வலி இல்லை. தேவ தேவதை போன்ற ஒரு பெண்ணை இழக்கும் வழியேதுமில்லை. கிலுகிலுப்பை ஆட்டும்போது அழ மறந்த குழந்தைபோல அவள்முகத்தை பார்க்கும்போது எனைமறந்துபோகின்றேன்
களவு செய்தே கைதும் செய்தாள் நின்று கொண்டே நடக்க வைத்தாள் கண்கள் இரண்டும் சிரிக்க வைத்தாள் மௌனமாக பேசவைத்தாள்
பாடல் : ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே படம் : குஷி இசை : மணி சர்மா குரல் : முரளிதர் வரிகள் : பிங்காலி நாகேந்திரராவ்.
மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் கீழே :
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய் தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய் காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….
இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய் இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய் பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய் பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய் தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய் உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய் விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய் விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய் தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
பாடல் : இஷ்டம் இஷ்டம் படம் : அம்ருதம் (மலையாளம்) இசை : ஜெயச்சந்திரன் குரல் : சித்ரா வரிகள் : கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி
மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் இங்கு
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம் பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம் முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம் மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம் முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு
நெருங்கிவரும் பொழுதினில் விரல்பேசவும் தூரம்போகும் வேளையில் தொலைபேசவும் பகலொன்றில் நீசிந்தும் பனிமுத்தமும் தீராத இரவிலுன் தோள்சாயவும் கனவுகளாய் என் கண்களினில் உள்ளே முழுதும் நீதான்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம் பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
கண்ணோர கனவிலும் கதைபேசவும் கொண்டாடும் விழியினில் குடியேறவும் கடற்கரை நடையினில் விரல்பின்னவும் காதோடு இழைகின்ற இசையாகவும் எந்நேரமும் உன்னோடுதான் உயிராக சேர்கிறேன் நான்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம் பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம் முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம் மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம் முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு
பாடல் : நாலோ ஊஹலக்கு படம் : சந்தமாமா இசை : கே.எம். இராதாகிருஷ்ணன். குரல் : ஆஷா போஸ்லே வரிகள் : ஆனந்த் ஸ்ரீராம். (மெட்டுக்கு ஏற்ற(?) எனது தமிழ் வரிகள் கீழே…)
“ஒரு சிரி கண்டால்” எனும் மலையாளப் பாட்டின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள் :
ஆண் :
குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…
கார்கால மேகம்… கருஞ் சாந்தள்ளிப் போகும் தலையாட்டி நீள்கூந்தல் உலரும் நேரம்… ஹோய்… வெயில் காயும்நேரம் சுட்டெரிக்கும் தீச்சூர்யன் சிறுவிழிச் சூட்டினில் உருகுவதேன் கண்ணே நதியினில் மீனென அலைகிற பெண்ணுடன் சேர்ந்தாடும் நீரும் பொழிகிற மழையினில் நனைகிற உன்னுடன் கூத்தாடும் வானும் உலகே வந்து கொஞ்சுமோ… உயிரில் வந்த ஓவியம்
பெண்:
கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும் அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே புயல்வெளி காற்றைப் போல் நாணம் தடுக்கிறதே அந்தியில் பூத்ததும் காற்றுடன் கலக்கிற பூமணம் போலே இரவினில் தனியென நிலவுடன் மொழிகிற ஆகாயம் போலே கனவில் வந்து சொல்லுவேன்… நனவில் கொண்ட காதலை
பாடல் : அண்டங்கா லேனா (தெலுங்கு) சொர்க்கம் போவேனா (தமிழ்) படம் : கோதாவரி (தெலுங்கு) இசை : கே. எம். ராதாகிருஷ்ணன் குரல் : சுனிதா தமிழ் வரிகள் : அருட்பெருங்கோ ( இது தெலுன்ங்குப் பாடலின் மொழிபெயர்ப்பல்ல. மெட்டுக்கு பாட்டெழுதும் என் கன்னி முயற்சி )
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா… சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா… வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா… சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
Recent Comments