இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்
இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ..ஹோ… ஒரே ஞாபகம்
ஒஹோ..ஹோ… உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது தூக்கம் இங்கு ஏது?
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்
படம் : மின்னலே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
குரல் : தேவன்
செல்ல செல்லமாய் எனக்குள்ள் சிறு சாரல்கள்
கனவுகள்…. உன் கண்கள் சேருமா?
சாரலில்… உன் இதயம் நனையுமா?காதல் பூக்கள் கண்கள் போலே பூக்க வைத்தேன்
பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி வைத்தேன்
நீ வரும்வழியில்… உன் கருவிழியும்… வண்டாகுமோ… கொண்டாடுமோ(சின்ன சின்னதாய்)
காற்றைக் கூட பாடல் மூலம் உழுது வைத்தேன்
காதல் கவிதை எந்தன் இதழில் எழுதி வைத்தேன்
உன் பூவிதழும்… உன் தேனிதழும்… இசையாகுமோ… கவிசேருமோ
(சின்ன சின்னதாய்)
கனவில் வந்தாய் கன்னக் குழியில் நழுவ பார்த்தேன்
காலைப் பனியில் காதல் கலந்து மழை வார்த்தேன்
உன் கல்மனசும்… என் நிலமாகும்…. மண்வாசனை… உண்டாகுமோ
(சின்ன சின்னதாய்)
இது என்ன புது உணர்வோ மனதில் பாயுதே
இது என்ன புது கனவோ நெஞ்சை வருடுதே
இந்த சுகம் புது சுகம்
இனியெல்லாம் இனிமை
புது யுகம் தினம் தினம்
இனியெல்லாம் புதுமை
படம் : சித்திரம் பேசுதடி
இசை : சுந்தர் சி பாபு
மஞ்சு ஹரிதாஸ் குரலில் :
விஜய் கோபால் குரலில் :
பாடல் : ஜல்சா பண்ணுங்கடா
படம் : சென்னை 600028
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : ரஞ்சித், திப்பு, ஹரிசரண், கார்த்திக்
வரிகள் : ???
வாழ்க்கைய யோசிங்க டா, தலையெழுத்த நல்லா வாசிங்க டா
யோசிச்சுப் பாருங்க டா எல்லோரும் ஒன்னா சேருங்க டா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க இளமை இருக்குதடா
வருகிற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஞாபகம் வந்ததடா, அந்த நாள் ஞாபகம் வந்ததடா
நண்பன விட ஒருத்தன் , லைஃப்க்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குவியுமடா
நம் வெற்றிகள் குவியுமடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
உழைக்கும் கைய நம்பி நாளை உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா ஊரே வணங்குமடா
நான் உங்க தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்க வையுங்கடா
என் மேல நம்பிக்க வையுங்கடா
ஓ.. இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
காதல் வந்துச்சுனா முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா கவர்ச்சிகள் தோன்றுமடா
காதல் இருந்தா கவலைகள் தீரும் காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்க நல்லா இருக்குமடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனைகள் நமக்கு இப்போ எதுக்கு உசாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
பாடல் : நானாக நானில்லை தாயே
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
இசை : இளையராஜா
குரல் : எஸ்.பி.பி
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
(நானாக)
கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)
பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
பாடல் : பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
படம்: பொறி
இசை: தினா
குரல்கள் : மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
வரிகள் : ???
பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
ம்ம்ம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல்
செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
Recent Comments